|
|
|
|
|
|
|
|
கல்லூரியின் புதிய அதிபராக திரு.வசந்தன் பெரேரா அவர்கள் நியமனம்! |
[15 March 2024 17:20 GMT] கொக்குவில் இந்துக் கல்லூரியின் புதிய அதிபராக திரு.வசந்தன் பெரேரா அவர்கள் அவர்கள் நியமனம் செய்யப்படுள்ளார். இவர் தனது கடைமைகளை 15.03.2024 அன்று போறுப்பேற்றுக்கொண்டார்.
கல்லூரியின் புதிய அதிபராக இன்று பதவியேற்க்கும் திரு.வசந்தன் பெரேரா அவர்களை கொக்குவில் இந்துக் கல்லூரி சமூகம் சார்பாக வரவேற்க்கின்றோம்.
Detail>>>
|
|
|
|
|
க.பொ.த சாதாரண தரப்பரீட்சை (2022) - பெறுபேறுகள் 17 -9A , 25 -8A , 20-7A ,17-6A, 11-5A |
[01 December 2023 10:27 GMT] க.பொ.த சா/த பரீட்சை - 2022 பெறுபேறுகள் நேற்று 01/12/2023 வெளிவந்துள்ள நிலையில், கொக்குவில் இந்துக்கல்லூரி மாணவர்கள் பதினேழு மாணவ/ மாணவிகள் ஒன்பது பாடங்களில் அதி சிறப்பு சித்தியும் (9A) , இருபத்தைந்து மாணவ/ மாணவிகள் எட்டு பாடங்களில் அதி சிறப்பு சித்தியும் (8A) மேலும் இருபது மாணவ/ மாணவிகள் ஏழு பாடங்களில் அதி சிறப்பு சித்தியும் (7A) பெற்றுள்ளனர்.
பதினேழு மாணவ/ மாணவிகள் ஆறு பாடங்களில் அதி சிறப்பு சித்தியும் (6A) மேலும் பதினொரு மாணவ/ மாணவிகள் ஐந்து பாடங்களில் அதி சிறப்பு சித்தியும் (5A) பெற்று சாதனை படைத்துள்ளனர்!!
அனைத்து மாணவச்செல்வங்களுக்கும் கல்லூரிச் சமூகம் சார்பாக எமது பாராட்டுதல்களையும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
Detail>>>
|
|
|
ஊக்கமிகு அச்சம் தவிர் நிகழ்வு -2023 |
[16 August 2023 08:20 GMT] கொக்குவில் இந்துக் கல்லூரியில் தடம்பதிக்கும் தரம் 06 (2023) புதுமுக மாணவர்களை வரவேற்று அவர்களை மகிழ்ச்சிகரமான பாடசாலை சூழலுக்கு இசைவாக்கம் செய்யும் "ஊக்கமிகு அச்சம் தவிர்” நிகழ்வானது 17/08/2023ம் திகதி வியாழக்கிழமை காலை 8:30 மணிக்கு கல்லூரியில் நடைபெறும்.
Detail>>>
|
|
|
ஜனாதிபதி சாரணர் விருதினைபெற்ற கல்லூரி மாணவிகள்! |
[03 June 2023 11:30 GMT] குருநாகல் மாகாண சபை மண்டபத்தில் 02ம் திகதி ஜூன் மாதம் இடம் பெற்ற சாரணர்களுக்கான ஜனாதிபதி விருது வழங்கும் நிகழ்வில் யாழ் மாவட்டத்தில் இருந்து 25 சாரணர்கள் இம்முறை ஜனாதிபதி விருதினை பெற்றுக்கொண்டனர்.
இம்முறை 10 பெண் சாரணர்கள் ஜனாதிபதி விருதினை பெற்றார்கள் என்பது குறிப்பிடதக்கது . இதில் ஜனாதிபதி விருதினை பெற்ற எட்டு மாணவிகள் கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவிகள் என்பது பெருமகிழ்ச்சிகுரியது.
ஜனாதிபதி சாரணர் விருதினை பெற்ற மாணவிகள் ஆதிரை, பமிலா , அஷ்வினி , வேந்திகா, ராகவி , தனுசியா, சுமிஷ்ரி, கவியரசி ஆகிய எமது கல்லூரி மாணவிகளுக்கும் லூகாஸ், சஜீவ், கார்த்திகன் , டினேஷ்காந் , அபிசேக் ஆகிய எமது கல்லூரி மாணவர்களுக்கும் எமது வாழ்த்துக்களும் பாரட்டுகளும்.
Detail>>>
|
|
|
கண்ணீர்ப்பூக்கள் - திருமதி கணேஷ்வரி பஞ்சலிங்கம் |
[17 May 2023 06:35 GMT] எமது கல்லூரியின் முன்னாள் தாவரவியல் ஆசிரியை திருமதி கணேஷ்வரி பஞ்சலிங்கம் அவர்கள் 16-05-2023 செவ்வாய்க்கிழமை அன்று அமெரிக்காவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவதோடு, அன்னாரின் மறைவினால் துயர் கொள்ளும் குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்களுக்கு எமது சங்கத்தின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.
Detail>>>
|
|
|
கண்ணீர்ப்பூக்கள் - திரு. மாரிமுத்து குலசேகரம் |
[30 March 2023 08:20 GMT] எமது கல்லூரியின் ஓய்வுநிலை பிரதி அதிபர் திரு. மாரிமுத்து குலசேகரம் அவர்கள் 29-03-2023 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவதோடு, அன்னாரின் மறைவினால் துயர் கொள்ளும் குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்களுக்கு எமது சங்கத்தின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.
Detail>>>
|
|
|
அச்சம் தவிர் உச்சம் தொடு -2023!! |
[22 March 2023 01:20 GMT] கொக்குவில் இந்துக் கல்லூரியில் தடம்பதிக்கும் தரம் 06 வகுப்புக்கான புதுமுக மாணவர்களை வரவேற்று அவர்களை மகிழ்ச்சிகரமான பாடசாலை சூழலுக்கு இசைவாக்கம் செய்யும் "அச்சம் தவிர் உச்சம் தொடு" நிகழ்வானது 23/03/2023 வியாழக்கிழமை காலை 7:30 மணிக்கு கல்லூரியில் நடைபெறும்.
Detail>>>
|
|
|
இனிய தைத்திருநாள் வாழ்த்துகள்! |
[14 January 2023 06:02 GMT] கல்லூரி பழைய மாணவர்கள் , ஆசிரியர்கள் , பெற்றோர்கள் , நலன் விரும்பிகள் யாவருக்கும் எங்கள் உளம் கனிந்த இனிய தைத்திருநாள் பொங்கல் வாழ்த்துகள்.
மலரும் புத்தாண்டில் மனங்களில் மகிழ்ச்சியும் என்றும் குறையாத அன்பையும் கொண்டுவரும் ஆண்டாக அமைய எங்கள் இனிய தைத்திருநாள் பொங்கல் வாழ்த்துகள்.
Detail>>>
|
|
|
கண்ணீர்ப்பூக்கள் - திரு. செல்லத்துரை இரத்தினப்பிரகாசம் |
[08 September 2022 10:20 GMT] எமது கல்லூரியின் பழைய மாணவரும் கொழும்பு பழைய மாணவர் சங்கத்தின் ஆரம்ப உறுப்பினரும், தற்போதைய உப தலைவருமாகிய திரு. செல்லத்துரை இரத்தினப்பிரகாசம் அவர்கள் 08-09-2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவதோடு, அன்னாரின் மறைவினால் துயர் கொள்ளும் குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்களுக்கு எமது சங்கத்தின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்ளுகின்றோம்
Detail>>>
|
|
|
உயர்தரப் பரீட்சை 2021 முடிவுகள் 06 மாணவர்கள் 3A ,10 மாணவர்கள் 2AB,!! |
[29 August 2022 08:21 GMT] க.பொ.த. உயர்தரப் பரீட்சை 2021ம் ஆண்டு முடிவுகள் நேற்று வெளியான நிலையில் கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவர்கள் 06 பேர் 3A யும் , 10 மாணவர்கள் 2AB யும் எடுத்தனர்.
உயிரியல் பிரிவில் 02 மாணவர்கள்,கலைப்பிரிவில் 02 மாணவர்கள் , கணித பிரிவில் 01 மாணவர்கள் , வணிகப் பிரிவில் 01 மாணவர்களும் என மொத்தமாக 06 மாணவ மாணவிகள் 3A சித்தி பெற்றனர்.
கணித பிரிவில் 05 மாணவர்கள், உயிரியல் பிரிவில் 02 மாணவர்கள் ,கலைப்பிரிவில் 01 மாணவர்கள் ,வணிகப் பிரிவில் 02 மாணவர்களும் என மொத்தமாக 10 மாணவ மாணவிகள் 2AB சித்தி பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
க.பொ.த. உயர்தரப் பரீட்சை 2021ம் ஆண்டு பரீட்சையில் சிறப்புற சித்தியடைந்த அனைத்து மாணவச் செல்வங்களுக்கும் அவர்களுக்கு வழிகாட்டிய ஆசிரியர்களுக்கும் கல்லூரி சமூகம் சார்பில் நல் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
Detail>>>
|
|
|
கண்ணீர்ப்பூக்கள் - திரு.சிவஞானசுந்தரம் ராஜ்குமார் |
[06 August 2022 07:47 GMT] எமது கல்லூரியின் பழைய மாணவனும் (1994ம் ஆண்டு அணி) கொக்குவில் இந்து பழைய மாணவர் சங்கத்தின் முன்னாள் செயலாளரும் ஆகிய திரு.சிவஞானசுந்தரம் ராஜ்குமார் அவர்கள் 02-08-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவதோடு, அன்னாரின் மறைவினால் துயர் கொள்ளும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களுக்கு எமது எமது ஆழ்ந்த இரங்கல்கள்.
Detail>>>
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Visitors on 2024-11-07 |
|
|
|
|
|
ZZ |
13 |
AT |
01 |
CA |
04 |
FR |
15 |
GB |
03 |
US |
65 |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|