|
|
|
கல்லூரி வணக்கம் |
|
தெளிதரு கலைபயில் பலமா ணவர்தேர் |
கொக்குவில் இந்துக் கல்லூரி; |
|
கொக்கூர்க்கு இந்துக் கல்லூரிநீ தீபம்; |
கிராமத்துக் கொண்மணி மகுடம். |
நினதுயர் கலைமுறை நிதம் நிதம் பெற்றோம்; |
நினதருள் யாமினி மறவோம். |
நீயே வித்தை யினுறையுள் , நினதே எங்களினுயர்வு. |
நினதடி யேத்து வோமே. |
|
பல்லவி |
நினதருள் மிகுமொழி நமதே பொருளாம் நீதரு ஞானம தீதம் |
ஜெயஹோ! ஜெயஹோ! ஜெயஹோ! ஜெய, ஜெய, ஜெய , ஜெயஹோ! |
நீ தரு ஞானம தீதம். |
|
அறிவுச்சுடர் கொண் டறம் பொருள் ளின்பம் |
தழுவும் வாழ்வினைத் தந்தாய் |
கற்றன ஒழுகும் சீருறு வழிநீ |
காட்டினை நீடுக எனவே |
அற்புத நடமா டமலன் அடிமனதொடுவழி படுவோம்; |
வழிமுறை மிளிர்க நின் நாமம். |
|
பல்லவி |
நினதருள் மிகுமொழி நமதே பொருளாம் நீதரு ஞானமதீதம் |
ஜெயஹோ! ஜெயஹோ! ஜெயஹோ! ஜெய, ஜெய, ஜெய , ஜெயஹோ! |
நீ தரு ஞானம தீதம். |
|
உள்ளத்துறுதி தருவாயுன்றன் |
பாரம் பரியம் பேண |
பூமியில் நீபெறும் நல்லிசை மேலாம் |
பெருமிதம் மாணவர்க் கென்றும் |
முயல்குவம் நீயுயர் வழிகள் முழுமன தொடுமகிழ் வாக |
கொக்குவில் இந்து நமதே. |
|
நினதருள் மிகுமொழி நமதே பொருளாம் நீதரு ஞானமதீதம் |
ஜெயஹோ! ஜெயஹோ! ஜெயஹோ! ஜெய, ஜெய, ஜெய , ஜெயஹோ! |
நீ தரு ஞானம தீதம் |