|
அந்த பன்னிரு வருடங்கள் அழகாகவும் அனுபவமாகவும் இருந்தன,இன்று அதற்கு என்னை நினைவில்லை,என்னுடன் படித்தவற்க்கே இல்லாதபோது இந்துக்கல்லூரி எப்படி நினைக்கும் என்னை,தப்புக்கல்தான் என் செய்கை,தப்பித்தது கல்லூரி,என் காதலின் சின்னமும் அதுவே,தோல்வியின் துயரமும் அதுவே,இந்திய யுத்தத்தில் தஞ்சம் தந்த தையும் அதுவே.ஒ அ#றிணையில் சொல்கின்றேனோ! உயர்திணைகளை அ#றிணை களே ஆண்டவனின் இருப்பிடங்கள்,அதனால்தான் கல்வித்தாயும் கொக்குவில் இந்துக்கல்லூரியில் வருடம் நூறுகண்டும் வனப்புடன் வாழ்கின்றாள்!!அன்றைய அன்பான ஆசிரியர்கள்(திரு ஜெகநாதன்,திரு வேலாயுதபிள்ளை,திரு புவனசுந்தரராஜா,திரு காசிநாதன்,திரு நாகராஜா,திரு பழனி,திரு பேரம்பலம்,திரு நாகலிங்கம்,திரு டொல்ளர்,திருமதி சுந்தரமூர்த்தி,திரு அருமைநாயகம்,திருமதி கரடி,திருமதி சுகிர்தா,திருமதி ரஞ்சி......),அதிபர்கள்(திரு மகாதேவன்,திரு பஞ்சலிங்கம்),மாணவர்கள், அன்றைய நண்பர்களை(சத்தி,மணி,கோபால்,கோபு,கண்ணன்,பாலன்,சர்குணா,கிப்பி,நகுலன்,நிர்மலன்,பலாலி,பகீர்,மதன்.....) நினைவு கூறுவதுடன் நன்றி பகர்கின்றேன். |
|